சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாக குறைந்து வந்தநிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று (அக்.10ஆம் தேதி) ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,200க்கும், கிராம் ரூ.7,025க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆயுத பூஜை தினமான இன்று (அக்.11ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,760க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,095க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.46,960க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,870க்கும் விற்பனை செய்யப்படுகிறது.